കന്യാകുമാരി ജില്ലയിലെ മലയാളികളുടെ സ്ഥാപങ്ങളുടെയും മറ്റും പരസ്യം ഈ ബ്ലോഗില്‍ സൌജന്യമായി പ്രദര്‍ശിപ്പിക്കാന്‍ r.krishnan.email@gmail.com എന്ന വിലാസത്തിലേക്ക് ഒരു മെയില്‍ ചെയ്യുക.
കന്യാകുമാരി ജില്ലയിലെ മലയാളികളില്‍ നിരവധി പേര്‍ ഇപ്പോഴും മലയാളത്തില്‍ എഴുതാന്‍ കഴിവുള്ളവരാണ്. നമുക്ക് ചുറ്റുമുളള കന്യാകുമാരി ജില്ലയിലെ മലയാളി എഴുത്തുകാരുടെ സാഹിത്യ സൃഷ്ടികള്‍ നമുക്ക്‌ ഇവിടെ പ്രസിദ്ധീകരിക്കാന്‍ ശ്രമിക്കാം. കന്യാകുമാരി ജില്ലയില്‍ മലയാള ഭാഷയുടെ വളര്‍ച്ചയ്ക്ക്‌ നമ്മുടെതായ രീതിയില്‍ എന്തെങ്കിലും ചെയ്യാന്‍ സാധി ച്ചാല്‍ അതൊരു വലിയ കാര്യമായിരിക്കും. എല്ലാ സുഹൃത്തുക്കളുടെയും സഹകരണം പ്രതീക്ഷിക്കുന്നു.....അതുപോലെ തന്നെ തമിഴ്‌ ഭാഷയിലെ രചനകളും ഇവിടെ സ്വാഗതാര്‍ഹമാണ് .
നിങ്ങളുടെ കൃതികള്‍ ഇവിടെ പ്രസധീകരിക്കാന്‍ താല്പര്യമുണ്ടെങ്കില്‍ r.krishnan.email@gmail.com എന്ന വിലാസത്തിലേക്ക് അയയ്ക്കുക.

Wednesday, August 5, 2009

கன்னியாகுமரி-வரலாறு

கன்னியாகுமாரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்னியாகுமரி அம்மன் என்னும் தேவதையை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இ,/.m.ம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது.

இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை (வயலை) உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு. தற்போது அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் வந்ததாகத் தெரிகிறது.

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம்

தற்போது கல்குளம், விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு, சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட (வேனாடு) திருவிதாங்கூர் மன்னர்கள் நாஞ்சில் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளை கைவசப்படுத்திக்கொண்டனர். வீர கேரள வர்மாவால் துவங்கப்பட்ட இக் கைப்பற்றுக்கொள்கை அவரின் பின்காமிகளால் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டு கி.பி.1115 -ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது.

ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேனாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராக படையெடுத்தனர். இதன் விளைவாக கன்னியாகுமரி, 1609- ஆம் ஆண்டு மதுரை, விஸ்வநாத நாயக்கரின் வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர் ரவி வர்மா, மார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேனாடு கடும் உள்நாட்டு குழப்பங்களை சந்தித்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டை தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றிகொண்ட போதிலும் சந்தா சாகிபுவை சமாளிக்க முடியாததால் போர்களத்தை விட்டு பின்வாங்க வேண்டியிருந்தது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேனாட்டை 1947 வரை அவர்களே ஆண்டுவந்தனர்.

பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. அதன் பிறகு 1956 - 1961 ஆகிய ஆண்டுகளுக்குள் அதன் ஆளுமை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களின் பாணியில் தமிழகத்துடன் இணைந்தது.

No comments:

Post a Comment